மட்டக்களப்பு – கல்முனை வீதியில் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறிக் கொள்ளை
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் அதிகாலை வேளையில் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறிக் கொள்ளை இடம்பெற்றுள்ளதான முறைப்பாடு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் பொலிஸார் தீவிர தேடுதல் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை 08.12.2019 அதிகாலை 3 மணியளவில் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி பெரியகல்லாறு ஆலையடிப் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த வழிப்பறிக் கொள்ளைச் சம்பவத்தில் 7 பேரிடமிருந்து சுமார் 63 இலட்ச ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
ஆயுதம் தரித்த இருவர் பிரதான வீதியில் நின்றுகொண்டு, வீதியூடாக பயணித்தவர்களை வழிமறித்து, அவர்களிடம் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.
இவ்விதம் 5 வாகனங்கள் வழிப்பறியர்களால் மறிக்கப்பட்ட நிலையில் அவ்வாகனங்களிலிருந்த மீன்வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், ஏனைய தொழில்களுக்கு கையில் ரொக்கப் பணத்துடன் சென்ற 7 பேரிடம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி இத்துணிகர கொள்ளையடிப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதும் உஷாரடைந்த பொலிஸார் பொலிஸ் உயர்மட்ட உத்தரவுகளின் பேரில் தீவிர தேடுதல், கண்காணிப்பு, துப்பறியும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை 4 மணிவரை சம்பவம் தொடர்பாக எவரும் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை.
கருணா அம்மானின் கை வேலையாக இருக்கலாம். அவனைப் பிடித்து முதலில் விசாரியுங்கள்.
ReplyDeleteகுறிப்பாக முஸ்லிம்களின் உயிர், உடைமைகளின் மீது தீராத மோகம் கொண்ட பாசிச புலிகளின் எச்சங்களின் கைவரிசையாகத்தான் இது இருக்க வேண்டும்.
ReplyDeleteமற்றவர்கள் உழைத்து உண்ண இவனுகள் பறித்து உண்பதையே வழக்கமாக பின்பற்றி வந்துள்ளனர்.