ஈரான் ஜனாதிபதியும், ஜோர்தான் மன்னரும் ஜனாதிபதி கோத்தாபயவுக்கு வாழ்த்து
ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி மற்றும் ஜோர்தான் நாட்டின் மன்னர் இரண்டாம் அப்துல்லா அகியோர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
“இரு நாடுகளினதும் மக்களின் நலன்பேணலுக்காக எமது பலமான நட்புறவையும் ஒத்துழைப்பையும் உங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ் மேம்படுத்தி இலங்கையுடன் தொடர்ந்தும் நெருங்கி செயற்பட ஜோர்தான் எதிர்பார்த்துள்ளது” என மன்னர் அப்துல்லா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
ஜனாதிபதி கோத்தாபய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ள ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி, இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதோர் யுகம் ஆரம்பித்திருப்பதை குறிக்கும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் இரண்டு நாடுகளுக்குமிடையில் பல்வேறு துறைகளிலும் இருந்துவரும் நட்புறவை மேலும் பலப்படுத்துவதே தனது விருப்பமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment