Header Ads



தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சகல இனத்தவர்களையும் சுதந்திரமாக வாழச்செய்வதே முதல் நோக்கம்

நாட்டின் எந்தவொரு வளத்தையும்  வெளிநாட்டவர்கள் உரிமைகொள்வதற்கு இடமளிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

வெயாங்கொடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் புலனாய்வு பிரிவு பலவீனப்படுத்தப்பட்டமையால் ஏற்பட்ட பாதிப்பை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக, தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி சகல இனத்தவர்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை கட்டியெழுப்புவதே தனது முதலாவது நோக்கமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.