ரணில், மஹிந்தவுக்கு அனுப்பிய கடிதம் - கோத்தபயவிடம் ஒப்படைப்பு
ஓய்வுபெறும் பிரதமர் ஒருவருக்கு கிடைக்கும் சகல வரப்பிரசாதங்களையும் கோரி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பப்பட்ட கடிதம், பிரதமரினால் ஜனாதிபதியின் கவனத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சருக்குரிய சகல வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொடுக்குமாறு கோரி பாராளுமன்ற சபைத் தலைவரின் செயலாளரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, குண்டு துளைக்காத வாகனம், 9 பொலிஸ் வாகனங்கள், அம்பியுலன்ஸ் ஒன்று, பிரதமர் காரியாலயத்துக்குரிய 8 வாகனங்கள் என்பனவும், ஒரு வைத்தியர் மற்றும் தாதியர் ஆகியோரும் முன்னாள் பிரதமரினால் கோரப்பட்டுள்ளதாகவும் சகோதர தேசிய ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், இராணுவம் மற்றும் பொலிஸ் படையணிகள், உத்தியோகபுர்வ வாசஸ்தலம், காரியாலய வசதி, செயலாளர் ஒருவர் என்பனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. DC
Post a Comment