எதிர்க்கட்சித் தலைவராக சஜித்தை, ஏற்றுக் கொள்கிறேன் - சபாநாயகர் அறிவிப்பு
எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக சஜித்தை நியமிக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியினால் செய்யப்பட்ட பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் எதிர்க்கட்சித் தலைவர் என்பது தொடர்பில் எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு சஜித்தை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், சபாநாயகரிடம் இன்றைய தினம் -05- எழுத்து மூலம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment