ராகுல் காந்தியின் உரையை, மொழிபெயர்த்து புகழ்பெற்ற ஷபா ஷெபீன் (வீடியோ)
இன்று 05.12.2019 தனதுவயநாடு தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழாவில் பங்கெடுத்தார். ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மலையாளத்தில் மொழிபெயர்க்க காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தயாராக இருந்தார்.
ஆனால் ராகுல் காந்தி மைக் பிடித்து, தனது உரையை மொழிபெயர்ப்பு செய்ய இந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் யாராவது தயாரா என்று கேள்வி எழுப்பினார். ஆசிரியர்கள் அனைவரும் மவுனமாக தயக்கம் காட்ட யாரும் எதிர்பாராத விதமாக பள்ளிக்கூட +2 மாணவி ஷபானா ஷெபின் நான் மொழியாக்கம்செய்கிறேன் என்று மேடைக்கு வந்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆங்கில உரையை #அனைவரும்வியக்கும் வகையில் அற்புமாக மொழி பெயர்த்து அனைவரின் கவத்தையும் ஈர்த்து ஊடக வெளிச்சத்தை பெற்றார். தனது உரையை முடித்த ராகுல் காந்தி மாணவியின் திறமையை பாராட்டிவிட்டு விடை பெற்றார்
2
ஒரு மணிநேரத்தில் உலக புகழ்பெற்றார் மார்க்க அறிஞரின் மகள்
=======================
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் ஆங்கில உரையை அழகு மலையாளத்தில் மொழி பெயர்த்த ஷபாஷெபினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ராகுலின் ஆங்கில உரையை கருத்து சிதைவின்றி மொழிபெயர்த்த ஷபானாஷெபினின் தந்தை ஒரு மார்க்க அறிஞராவார். வயநாடு முனீருல் இஸ்லாம் அரபி பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றும் அவர் தனது மகளின் துணிச்சல் தன்னை பிரமிக்க வைத்ததாக கூறுகிறார்.
சிறப்பான முறையில் மொழிமாற்றம் செயத அச்சிறுமிக்கு ராகுல் அவரகள் chocolate கொடுத்து மகிழ்வித்ததை குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே ஐயா.
ReplyDelete