Header Ads



பாராளுமன்றத் தேர்தலில் ஐதேக சார்பில் மாத்தறையில் போட்டியிடுவேன் - அரசியலில் இருந்து விலகவில்லை

அரசியலில் இருந்து விலகத் தீர்மானிக்கவில்லை எனவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகவும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வெலிகமை பிரதேசத்தில் உள்ள மெரியட் ஹொட்டலில் நடைபெற்ற சந்திப்பொன்றில் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு உதவியவர்களுக்காக மங்கள இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

மங்கள சமரவீர அரசியலில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் சம்பந்தமாக சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மங்கள, தாம் அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தோல்வியால் தனிமைப்பட்டுள்ள கட்சியினரை கைவிட்டு தப்பிச் செல்ல தயாரில்லை எனவும் டிசம்பர் மாத நடுப் பகுதியில் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் அதன் பின்னர் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக நாடு திரும்ப உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

Powered by Blogger.