ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்க்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய
இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிறந்த முறையில் விருந்தோம்பலை மேற்கொண்டமையினால் ஜனாதிபதி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
“இலங்கையின் முறைபடி அளிக்கப்பட்ட விருந்தோம்பலுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்க்கு நன்றிகள். இலங்கையின் கொடியை ஏந்திச் செல்லும் நமது தேசிய அடையாளமானது நம் நாட்டை மீண்டும் பெருமைப்படுத்தி பெயர் வாங்க செய்யும் என நம்புகின்றேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்த பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது விஜத்தை இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டு நேற்று இரவு மீண்டும் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
Great appreciation from the President to the Srilankan Airline's Hospitality������ This will definitely motivate the entire team to develop further to boost the services.
ReplyDeleteWe remember some comments of previous leaders of the country regard to the Airline services
What a rubbish. Sri Lankan Air line is very selective in serving customers. Staff know he is the president and looked him after well. I hate Sri Lankan airlines and don't fly with them anymore.
ReplyDelete