வாழ்க்கை செலவை குறைத்து, ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்போகும் ஜனாதிபதி கோத்தா
வாழ்க்கை செலவு தொடர்பாக ஆராய உப குழு ஒன்றை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த குழுவில் பிரதமர், நிதியமைச்சர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், மஹாவலித்துறை அமைச்சர், சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
2
வசதி குறைந்த குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சம் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு பல்நோக்க அபிவிருத்தி செயலணியின் கீழ் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இந்த யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
இதன்மூலம் தொழில்களில் பயிற்றப்படாத இளைஞர்கள், யுவதிகள் நன்மை பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நியமனங்களில் அரசியல் நோக்கமில்லாமல் குறைந்த வசதிகளை கொண்டவர்களே முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.
இந்த திட்டம் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்தப்படவுள்ளதாகவும், இதன் மூலம் தனியார் துறையிலும் வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment