Header Ads



முஸ்லிம்கள் இந்த நாட்டில் நொந்துபோன, அநாதை சமூகமாக வாழ்கின்றார்கள்

(எச்.எம்.எம்.பர்ஸான்)

இந்த நாட்டில் தற்போது சிறுபான்மைச் சமூகம் குறிப்பாக முஸ்லிம்கள் நொந்து போய் அநாதையான சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினரும் முன்னாள் உப தவிசாளருமான ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் பதுரியா நகர் அஸ் - ஸபா பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று விழா நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) மீராவோடையில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

நாங்கள் கடந்து வந்த காலங்களில் யுத்தம் இல்லாத காலத்தைப் பார்த்திருக்கின்றோம், யுத்த காலத்தைப் பார்த்திருக்கின்றோம், யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு சமாதான சூழலைப் பார்த்திருக்கின்றோம் அதற்குப் பிற்பாடு ஒரு நல்லாட்சியைப் பார்த்திருக்கின்றோம். இப்போது எந்த ஆட்சியிலும் பங்கில்லாத கைவிடப்பட்ட சமூகமாக, அநாதைகளாக ஓரங்கட்டப்பட்டுள்ளதை இந்த முஸ்லிம் சமூகம் கண்டு கொண்டுள்ளது.

எனவே நாங்கள் இந்த நாட்டில் தலைநிமிர்ந்து வாழ்வதற்கும், எங்களுடைய உரிமைகளை வெல்வதற்கும், எதிர்காலத்தில் எங்களுக்குள்ள சவால்களை முறியடிப்பதற்கும் எங்களிடம் இருக்கின்ற ஒரேயொரு ஆயுதம் கல்வி என்பதை நாங்கள் யாரும் மறந்து விட முடியாது.

யுத்த காலத்திற்கு முன்னர் முஸ்லிம் சமூகம் கல்வியில் பின்தங்கியிருந்தது ஆனால் யுத்தம் என்று ஆரம்பிக்கப்பட்ட பின்னர் எங்களுக்கென்று எதுவுமில்லை, யாரும் கை கொடுக்க முன்வரவில்லை, எங்களைப் பற்றி பேசுவதற்கு யாரும் இல்லை ஆனால் கல்வி தான் எங்களுடைய மூலதனம் என்று கல்வியிலே ஊரிப் போனவர்களாக, கல்வியிலே மிகவும் அக்கறை கொண்டவர்களாக எங்களுடைய சமூகம் அந்த காலத்தில் இருந்ததை வரலாறுகள் பதிந்து வைத்திருக்கின்றன.

எனவே அந்த கல்வி வளர்ச்சி தற்போது தளர்ந்துள்ளது மீண்டும் இந்த சமூகம் கல்வியில் மீண்டெழ வேண்டும். இந்த சமூகம் ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவே இவைகளில் இருந்து நாங்கள் மீள வேண்டும் என்றால் கல்வி எனும் ஆயுதத்தை நாங்கள் கையில் எடுக்க வேண்டும் என்றார்.

4 comments:

  1. இதை எல்லோரினதும் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    ReplyDelete
  2. KAIVIDAPPATTA, ANAATHAIKALAAKA
    MUSLIMGALAI,MAATRIYA, HAKEEM,
    RISHAD, PONRA THUVESHIKALUKKU,
    POIYANGALUKKU INNUM EMAARAMAL, IRUNDAL,MUSLIMGAL
    SHUMOOKAMAAKA,NIMMATHIYAAKA
    WAALALAM.

    ReplyDelete
  3. முஸ்லிம்கள் இந்த நாட்டில் நொந்துபோன, அநாதை சமூகமாக வாழ்கின்றார்கள்
    Brother A.M. Nowfar - ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினரும் முன்னாள் உப தவிசாளருமான அவர்கல,
    What you have stated above is "NOT TRUE", please. IT IS THE DECEPTIVE AND HOODWINKING MUSLIM POLITICIANS, ULEMA AND SOME SO-CALLED MUSLIM CIVIL SOCIETY COMMUNITY LEADERS WHO ARE நொந்துபோன, அநாதை சமூகமாக வாழ்கின்றார்கள். This is God AllMighty Allah's "PUNISHMENT" for them, "The Muslim Voice" feels, Insha Allah. The Muslim Community of Sri Lanka has got a "CHANCE" for a new political "REVIVAL", Insha Allah. Let all of us "UNITEDLY" try and achieve that "REVIVAL", Insha Allah. A very large percentage of "The Muslim Vote bank" have decided to vote the SLPP at the next general elections, Insha Allah.
    Just leave Muslim politics to be taken over by "NEW" young Muslims political aspirants who want a change, supporting HE. Gotabaya Rajpaksa. You should become one of those aspirants in Oaatamawadi, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  4. இப்படி சமூகம் சமூகம் என்று கதைத்தே இனவாதத்தை இந்த நாட்டிலே எங்கும் விதைத்து ள்ளீர்கள். இதனால் பெரும்பான்மை மக்கள் அவர்களின் சமூகத்தை மட்டும் பற்றி சிந்திக்க தொடங்கி விட்டார்கள் இதன் விளைவு எங்கு போய் முடியப்போகிறதோ? உம்மைப் போன்ற அரசியல் வாதிகளின் சுயநலமே இவைகளுக்கெல்லாம் காரணம் என்பதுதான் உண்மை

    ReplyDelete

Powered by Blogger.