Header Ads



கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை தவிர்க்க வேண்டும்

புதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள்    அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை  தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. 

இது தொடர்­பாக தமிழ்ப்­பெண்­க­ளி­ட­மி­ருந்து வந்த தொடர்ச்­சி­யான முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து  மேற்­படி திணைக்­க­ளத்­திடம் கேட்­கப்­பட்ட போதே அதன் ஊட­கப்­பேச்­சாளர் பி.ஜி.ஜி.மிலிந்த இத்­த­க­வலை வீரகேசரி வார­வெ­ளி­யீட்­டுக்­குத் ­தெரி­வித்தார்.  இது­தொ­டர்பில் அவர் கருத்­துத் ­தெ­ரி­விக்­கையில்,

தற்­போது சர்­வ­தேச நிய­மங்­களின் அடிப்­ப­டையில் இலங்கை கட­வுச்­சீட்டு தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே நாம் குறித்த சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு கட்­டுப்­பட்­ட­வர்­க­ளாக இருத்தல் அவ­சியம். ICAO எனப்­ப­டும்­சர்­வ­தேச சிவில் விமான போக்­கு­வ­ரத்து அமைப்­பா­னது புதிய கட­வுச்­சீட்­டுக்­கான படம் எப்­படி இருக்க வேண்டும் என்ற வழி­காட்­டு­தல்­களை எல்லா நாடு­க­ளுக்கும் வழங்­கி­யுள்­ளது.

அதன் படி கட­வுச்­சீட்­டி­லுள்ள படத்தில்  முகத்தில் எந்­த­வி­த­மான செயற்கை அடை­யா­ளங்­களும் இருக்க முடி­யாது. ஆகையால் நாம் நெற்­றியில் பொட்­டி­ருப்­பதை தவிர்க்­கச்­சொல்­கிறோம். 

கூடு­த­லாக ஐரோப்­பிய நாடு­க­ளுக்­குச்­செல்லும் பெண்­களே பாதிப்­ப­டை­கின்­றனர். அதா­வது பொட்டு உள்ள படத்தை  கட­வுச்­சீட்டில்  கொண்­டி­ருக்கும் பெண்கள்  சில சந்­தர்ப்­பங்­களில் பொட்டு இடாது 

சில நாடு­க­ளுக்கு  போகும் அவர்­களை  சில நாடு­களின் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள அதி­கா­ரிகள் நிறுத்தி வைத்த சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. அது மட்­டு­மன்றி குறித்த நாடு­க­ளுக்­கான விசாக்­களை பெறு­வதும் இவர்­க­ளுக்கு சவா­லா­கவே இருக்­கின்­றன. இக்­கா­ர­ணங்­களை வைத்து விசாக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்ட சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.  ஆகவே இது அவர்­களின் நன்­மைக்­கா­க­வே­யன்றி வேறு தனிப்­பட்ட கார­ணங்கள் கிடை­யாது. இருப்­பினும் இது தொடர்பில் முரண்­களும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. 

நாம் இது தொடர்பில் மக்­க­ளுக்கு விளக்­கங்­களை கொடுத்து வரு­கிறோம் என்று தெரி­வித்தார். ஊவா மற்றும் மத்­திய மாகா­ணத்தில் உள்ள தமி­ழர்கள் கண்­டியில் அமைந்­துள்ள குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­துக்கே சாதா­ரண கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிக்­கச்­செல்வர். 

இந்­நி­லையில் திணைக்­க­ளத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கட­வுச்­சீட்டு பட­மெ­டுக்கும் புகைப்­பட நிலை­யங்­களில் எடுக்­கப்­பட்ட படங்­களை மேற்­படி திணைக்­களம் நிரா­க­ரித்து பொட்­டு­களை தவிர்த்து அங்கு மீண்டும் படமெடுக்க அழுத்தம் கொடுப்பதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.இதே வேளை நெற்றிப்பொட்டு என்பது தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துடன் தொடர்புடைய அம்சம் என்பதால் அதைத் தவிர்த்து படமெடுப்பதற்கு பெண்கள் தயங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.