சஜித்திற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கியமை, ரணிலின் கட்சிப் பதவியை பாதுகாப்பதற்கான தந்திரமா..?
சஜித் பிரேமதாசவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியமை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்கான மற்றுமொரு காலத்தை தாமதிக்கும் வியூகமா என சிவில் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொண்டதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பதற்கு ஜனவரி 3 ஆம் திகதி மாலை வரை சபாநாயகர் காலம் தாழ்த்தியதன் ஊடாக இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக்குழு நேற்று (05) மாலை கூடிய சந்தர்ப்பத்தில், சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் பிரேரிக்கப்பட்டிருந்தது.
ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பின்னர், அது தொடர்பில் அறிவிக்கப்பட்டதுடன், கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் அந்த தீர்மானத்தை சபாநாயகருக்கு அந்த சந்தர்ப்பத்தில் அறிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரின் கடிதத்திற்கு அமைய, சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டதாக, சபாநாயகர் நேற்று மாலை அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டார்.
எனினும், ஜனவரி 3 ஆம் திகதி பாராளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டு, ஜனாதிபதி சிம்மாசன உரையை நிகழ்த்திய பின்னர், பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடி, எதிர்க்கட்சித் தலைவர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என சபாநாயகரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்மாசன உரைக்காக ஜனவரி 3 ஆம் திகதி காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
பாராளுமன்றத்தை பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் கூட்டுவது தொடர்பில், சபாநாயகர், பிரதமர் மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சபாநாயகர் நேற்று மாலை வௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு எனின், சிம்மாசன உரையின் பின்னர் பாராளுமன்ற கூட்டத்தை வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைக்க முடியும் என சிவில் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டால், சபாநாயகர் கூறும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரை அறிவிக்கும் செயற்பாடு மேலும் காலதாமதமாகும்.
இதேவேளை, டிசம்பர் 12 ஆம் திகதி அரசியலமைப்பு சபை கூடவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வெற்றிடமாகவுள்ள நீதவான் பதவிக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக அரசியலமைப்பு சபை கூடவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அரசியலமைப்பு சபையின் உத்தியோகப்பூர்வ உறுப்பினராவார்.
12 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசியலமைப்பு சபை கூட்டத்திற்கு இன்று மாலை வரை சஜித் பிரேமதாசவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.
எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதியின் சிம்மாசன உரை நிகழ்த்தப்படும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனம் சஜித் பிரமேதாசவிற்கு இதுவரையில் ஒதுக்கப்படவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்தால், எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனத்தை சஜித் பிரேமதாசவிற்கு ஒதுக்க முடியும் என பாராளுமன்ற பொதுச்செயலாளர் கூறினார்.
அவ்வாறு இல்லாவிடின், சிரேஷ்டத்துவத்திற்கு அமைய ஆசனங்கள் ஒதுக்கப்படும்.
கட்சிக்குள் கலந்துரையாடி எதிர்க்கட்சித் தலைவரை தீர்மானித்து, தமக்கு அறிவித்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவரை ஏற்றுக்கொள்வதாக ட்விட்டர் தளத்தில் சபாநாயகர் இதற்கு முன்னர் பதிவேற்றியிருந்தார்.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக தீர்மானித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில், ஜனவரி மாதம் 3 ஆம் திகதியின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சபாநாயகர் குறிப்பிடுகின்றார்.
ரணிலை தூக்கி விரட்டியடிக்க வேண்டும் அவனொரு பைத்தியக்காரன் பதவி ஆசையில் மிகவும் மோசமாக இருக்கிறான் விட்டுக்கொடுப்பதற்கு.
ReplyDelete