Header Ads



பாராளுமன்றத் தேர்தலில் ரணில் தலைமையில் போட்டியிடவுள்ளோம் - அகிலவிராஜ்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் போட்டியிடுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியை ரணில் விக்ரமசிங்க வழிநடத்துவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அகில விராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் தலைமைப் பொறுப்பினையும், தேர்தலை வழிநடத்தும் பொறுப்பினையும் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்குமாறு கட்சியின் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

Powered by Blogger.