Header Ads



சுவிஸ் தூதரக பெண், கடத்தப்பட்ட சம்பவம் போலியானது - ஜனாதிபதி கோட்டா

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் போலியானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆளும் கட்சி தலைவர்களின் கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி, “சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் நாளில், குறித்த பெண் பணியாளர், தூதரகத்திற்கு அருகில் இருந்து வாடகை கார் ஒன்றின் மூலம் பம்பலப்பிட்டிக்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்தும், அங்கிருந்து மீண்டும் வாடகை கார் மூலம் மாளிகாகந்தை பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். சிசிடிவி கண்காணிப்பு கமெரா மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் வாடகை காரின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் பல விபரங்கள் தொழில்நுட்பம் மூலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், சட்டமும், நீதிதுறையும் தனது கடைமையை சரியாக செய்யும்.

எவ்வாறாயினும், நாட்டிற்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்கி உண்மையை வெளிக்கொணர தனது அரசாங்கம் ஒருபோதும் தயங்காது என ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். Sivaraja

2 comments:

  1. ஜனீவாவின் இராஜதந்திர உறவுகள் பற்றிய விரிவான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. அந்த உடன்படிக்ைகயின்படி இதுபோன்ற விடயங்கள் மிக நுணுக்கமாகவும் இருதரப்பு உறவுகளுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் சுமுகமாகவும் பரஸ்பர நல்லெண்ணத்துடனும் தீர்க்கப்பட வேண்டும். அது தவிர்த்து உடனடியாக மறுப்பதும், அவற்றின் உண்மையை அப்பட்டமாக நிராகரிப்பதும் எந்த வகையிலும் இரு நாட்டு உறவுகளைப் பேணுவதில் நல்ல விளைவைக் கொடுக்காது. அதுமட்டுமன்றி இலங்கை சர்வதேச பிச்சைக்காரர்களின் தரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் போது இலங்கையின் பிச்சைத் தொழிலைச் சரியாகப் பேணும் வகையில் உறவுகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.மீண்டும் ஒரு செல்லநாய் தேவைப்பட்டாலும் திரும்பவும் செல்லவேண்டிய நாடு சுவிஸ்.எனவே இந்த விடயத்தில் வௌிநாட்டு அமைச்சரும் பொறுப்பான அதிகாரிகளும் மௌனமாக இருக்கும் போது நாட்டுத் தலைவர் கருத்துத் தெரிவிப்பது எமது சர்வதேச அந்தஸ்த்தைப் பெருமளவு பாதிக்கும் என்பதை இந்த நாட்டுக் குடிமகன் என்றவகையில் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  2. HE. President Gotabaya Rajapaksa,
    Excellency Sir,
    Please hold an immediate inquiry regarding the misconduct of the Swiss Ambassador in terms of International relations and kindly advice the Foreign Ministry to declare him "PERSONA NON GRATA" and kindly ask him to leave Sri Lanka within 24 or 48 hours please.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.