முஸ்லிம் என்று சொல்லு, நாட்டை காப்பாற்ற முந்து - கற்பாறையையும் கரையவைத்த சோககீதம்
சோககீதமானது எல்லோர் கண்களையும் குளமாக்கியவாறு மிஹிந்தலை குன்றின் மீது பட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த இசைக்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடில்லை. அந்த சர்வ மொழிக்குள்ளே வீற்றிருப்பதோ ஒரே சோக ராகம்தான். இற்றைக்கு பத்தாண்டுகளுக்கு முன் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தாய்மார்கள் வருடா வருடம் அணி திரண்டு, தம் துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொண்டு கண்ணீர் சிந்தும் சந்தர்ப்பம் அது.
“எனது மகன் மறைந்த போது அவருக்கு 22 வயது. 1999 ஆம் ஆண்டு மகன் ஊரைப் பாதுகாப்பதற்காக பதுங்கு குழிக்குள்ளே இருந்தபோது புலிகள் சுற்றி வளைத்து தாக்குதல் தொடுத்தனர். சிங்களவர்களுடன் முஸ்லிம் வாலிபர்களும் அதன்போது கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் அன்று கிராமங்களைப் பாதுகாப்பதற்காக ஊர் காவல் படையில் இணைந்திருந்தனர்.
இவர்கள் ஆயுதம் ஏந்தி ஊரைப் பாதுகாக்க முன்வந்ததால் அன்று நாம் இரவில் நிம்மதியாக உறங்கினோம். இவர்களை நினைவு கூரும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இம்முறையும் எனக்கு அழைப்பு வந்தது. இந்த இடத்தில் காணப்படும் நல்லபிமானப் பண்புகளைக் காணும்போது ஒரு வகையில் எனக்குப் பெருமையாகவுள்ளது. மகன் இப்போது இல்லாவிட்டாலும் இப்பிள்ளைகள் செய்த தியாகத்தால் நாட்டு மக்கள் இன்று மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து நிம்மதியடைகிறேன். சிவில் பாதுகாப்பு அணி மூலம் எமக்கு சமூகத்தில் ஏதோவொரு உரிமை கிடைத்துள்ள உணர்வொன்று ஏற்படுகிறது” என்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்முனை, சவளக்கடை கிராமத்தைச் சேர்ந்த என்.எம்.கதீஸா உம்மா கூறினார்.
இவரது மகன் ஐ.எம்.ஹனீபா 1999 ஆம் ஆண்டு புலிகளின் தாக்குதலில் பலியானார். அப்போது அவர் சிவில் பாதுகாப்பு அணியில் ஓர் உறுப்பினராக இருந்து பணிபுரிந்துள்ளார். இதனால் இவரது தாய் கதீஸா உம்மா மேற்படி அணியின் உரிமையாளராகவுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறார்.
அதுபற்றி அவர் குறிப்பிடுகையில், எனது மகன் ஹனீபா வாலிப வயதில் நாட்டுக்காக தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார். அவரது மகள் தற்போது மணமுடித்து எம்மை விட்டும் தூரமாகியுள்ளார். அது கதீசம்மாவுக்கு மனவேதனையைத் தருகின்ற போதிலும் சிவில் பாதுகாப்பு அணியைச் சேர்ந்தவர்கள் காட்டும் உறவால் கவலைகள் பறந்தோடி விடுகின்றன. இதே போன்றே மகன் மரணித்த போது சிங்கள, தமிழ், முஸ்லிம் கிராம மக்களும் பாதுகாப்பு அணியின் உறுப்பினர்களும் வந்து இறுதிக் கிரியைகளில் ஈடுபட்டமை அப்போது மனதுக்கு ஆறுதலாக இருந்தது என்று கதீஸா உம்மா கூறினார்.
இவரைப் போன்றே இதர முஸ்லிம்கள் மற்றும் சிங்கள, தமிழ் பெற்றோர்கள், மனைவிமார் வருடந்தோறும் மிஹிந்தலையில் ஒன்று கூடி மரணித்த தம் குடும்ப உறவுகளை நினைவு கூருகின்றனர். அனைவரும் சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஒன்றாக உண்டு குடித்து கழிக்கின்றனர். சமய சடங்கு சம்பிரதாயங்களிலும் ஈடுபடுகின்றனர்.
சிவில் பாதுகாப்பு அணியைச் சேர்ந்த 145 வீர, வீராங்கனைகள் பலியாகியுள்ளனர். இவர்களுக்காக மிஹிந்தலை நகரில் நினைவுத் தூபியொன்று நிறுவப்பட்டுள்ளது. குறித்த அணியைச் சேர்ந்த மரணித்த அனைவரது பெயர், ஊர், நிழற்படம் உள்ளிட்ட விபரங்கள் அதில் பதியப்பட்டுள்ளன.
இவ்விடத்தில் ஒன்று கூடுவோருக்கு யுத்தமோ இன மோதலொன்றோ தேவையில்லை. எல்லோர் உள்ளங்களிலும் பச்சாதாபமும் சோகமுமே குடிகொண்டிருக்கும். நாட்டில் வேறு எவரை விடவும் நாட்டில் சமாதானம் நிலவ வேண்டும் என்ற வேணவாவே இவர்களிடம் காணப்படுகிறது.
கல்முனையில் வசித்து வரும் எஸ்.எல்.ரிஸ்வானா என்ற மங்கையும் இளம் வயதிலேயே தன் கணவனை இழந்துள்ளார். மரணமான எஸ்.எம்.ஸாஹிர் முஹம்மத் என்பவரே இவரது கணவர். 2008 ஆம் ஆண்டு சிவில் பாதுகாப்பு காவல் நிலையத்திற்கு பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஸாஹிர் முஹம்மத் கொல்லப்பட்டார். இவர் தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் தனது தாயாரின் அனுசரணையுடன் வாழ்ந்து வருகிறார்.
எஸ்.எல்.ரிஸ்வானா தனது சோகக் கதையைத் தெரிவிக்கையில், எனது கணவன் இல்லாத நிலையில் நாம் இப்போது எமது ஊரில் எத்தகைய பீதியும் இல்லாமல் வசிக்கிறோம். சாதாரண மக்களாகிய நாம் எல்லா இன மக்களுடனும் சமாதானத்துடன் வாழவே விரும்புகிறோம். முன்பு கண்டது போன்ற யுத்தம் ஒன்றைக் காண விரும்புவதில்லை. யுத்தம் ஒன்று வந்தால் எனக்கு ஏற்பட்டது போன்று இதர தாய்மார்களுக்கும் கணவர் இல்லாது போகும். பிள்ளைகள் இல்லாது போகும். நாட்டில் சமாதானத்தை நிலை நிறுத்தப்போனபோதே நாம் கணவனை இழந்தோம். அவர்கள் உயிரைப் பறிகொடுத்து எம்மைத் தனிமைப்படுத்தி கட்டியெழுப்பிய சமாதானத்தை சிதைத்து மீண்டும் எம்மைப் போன்றவர்களைத் தனிமைப்படுத்த வேண்டாம் என்று நாட்டில் எல்லோரிடமும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
பொலன்னறுவை மாவட்டத்தின் கிழக்கு எல்லையிலுள்ள சுங்காவில் கிராமத்தில் வசித்து வரும் ஆர்.எம்.அபேசிங்க என்பவர் மூன்று ஆண் மக்களின் தந்தையாவார். இவர் 12 பேரன்களைக் கொண்ட பாட்டனாருமாவார். இவரது இளைய மகன் டிக்கிரி பண்டார. இவர் 1997 ஆம் ஆண்டு 21 ஆவது வயதில் கொல்லப்பட்டார். அப்போது அவர் ஊர் காவல்படை வீரராக இருந்தார்.
“கிராமங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்த காலம் அது. அப்போது பாடசாலைக் கல்வியை முடித்த கையோடு எனது மகன் ஊர் காவல் படையில் இணைந்தார். எங்களைப் பாதுகாப்பதற்கே அவர் அவ்வாறு இணைந்தார். அது 1997 ஆம் ஆண்டு ஒரு நாள், காலை வேளை சுங்காவில் பாதுகாப்பு அரண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் எனது மகனும் பலியானார். எனது மகனின் இழப்பை எப்படியும் என்னால் தாங்கிக் கொள்ள இயலாது. ஆனாலும் இப்போது நாம் மூன்று இனத்தவர்களும் எத்தகைய பேதங்களும் பார்க்காது ஒன்றாக உள்ளோம்.
இத்தகையதொரு நாள் அன்று இருந்திருக்குமானால் நாம் எமது பிள்ளையை இழந்திருக்க மாட்டோம்” என்று அபேசிங்க தெரிவித்தார்.
பயங்கரவாத தாக்குதல்களால் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் இந்த ஒன்று கூடலின்போது மலரஞ்சலி நிகழ்த்தப்படுகிறது. இதற்காக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் முதல் அவருக்கு கீழ் நிலையிலுள்ள சகல உத்தியோகத்தர்கள், மரணித்தோரின் உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் மத அனுஷ்டானங்கள் நடத்துவதற்காக சகல மதங்களையும் சார்ந்த மதத் தலைவர்களும் வருகை தருகின்றனர்.
இந்நாட்டில் சமாதானம் சக வாழ்வைக் கட்டியெழுப்புவதற்காக சிவில் பாதுகாப்பு திணைக்களம் முன்மாதிரியான வழிகாட்டல் ஒன்றை முன்வைத்து வருகிறது என்று மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
எங்களது சகல மதங்களையும் சகல இனங்களையும் சேர்ந்தவர்கள் இங்குள்ளனர். இவர்கள் அனைவரும் உள்நாட்டின் விவசாயம், நாட்டு பிரஜைகளது பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட செயற்பாடுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் பிரதேசத்தின் பாதுகாப்பில் சிங்களவர்களைப் போன்றே முஸ்லிம் வாலிபர்களும் சிவில் பாதுகாப்பு அணி என்ற வகையில் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் விகாரைகள், பள்ளிகள், கோவில்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பயிர்ச் செய்கை காணிகளிலும் அவ்வாறு கடமை புரிகின்றனர்.
வடக்கில் உள்ள எமது உறுப்பினர்களும் அம்மாகாணத்தில் பாரிய பங்களிப்புச் செய்கின்றனர். இவர்களால் பயிர் வேளாண்மையும் பண்ணப்பட்டு வருகின்றன. சமூக நலன்களிலும் அர்ப்பணித்து வருகின்றனர். பல்வேறு உற்பத்திகளும் இவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. எமது திணைக்களத்தின் கீழ் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைவரும் ஒருமுகப்பட்டு பாரிய உழைப்பில் ஈடுபடுகின்றனர். நாட்டுக்கு நல்லதொரு முன்மாதிரியைக் காட்டி வருகின்றனர். யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் ஒன்றுபட்டு கிராமங்கள், நிலபுலன்களைப் பாதுகாத்து வந்தனர். இன்றும் அவ்வாறே தொடர்கின்றன” என்று அவர் கூறினார்.
ஆரம்ப காலத்திலிருந்தே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட வாலிபர், யுவதிகள் பொதுமக்களது அன்றாட வாழ்வோடு இணைந்த பணிகளில் ஈடுபட்டே வந்துள்ளனர். 1980 களிலேயே இப்பாதுகாப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது. வடமத்திய, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள கிராமங்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டன. அதன்போது பாதுகாப்பு வழங்கும் தோரணையிலேயே இப்பிரிவு அமைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் தொண்டர் சேவை அடிப்படையிலேயே இதற்கு அங்கத்தவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு அன்றாடம் சிறு கொடுப்பனவொன்று வழங்கப்பட்டது. இச் சேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அரசு நாளடைவில் இதனை திணைக்களம் ஒன்றாக 2006.09.13 ஆம் திகதி நிறுவியது. அதனைத் தொடர்ந்து விரிவாக்கம் பெற்றது.
இம்முறை அநுராதபுரத்தையும் மிஹிந்தலையையும் இலக்காகக் கொண்டு நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன. 2015.04.23 ஆம் திகதியாகும் போது சேவையை நிறைவு செய்த 265 உறுப்பினர்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டன. மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான சந்ரரத்ன பல்லேகமவின் தலைமையில் மேந்படி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.-
நன்றி: ரெஸ
சிங்களத்தில்: சரத் மனுல விக்ரம
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்
அந்த கொடிய பயங்கரவாதிகலினால் எத்தனையோ கிராமங்கள்,மக்கள் அழிக்கப்பட்டார்கல்.ஆனால் இறைவன் அந்த பயங்கரவாத கும்பலை இறுதியில் சின்னாபின்னாமாக்கினான்.
ReplyDelete21st church la vachchathu Yar darling
ReplyDelete