ரஞ்ஜித் சொய்ஸாவின், வெற்றிடத்திற்கு கடும் போட்டி
உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்ஸாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பலர் மோதிக் கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பதவி தனக்கே கிடைக்க வேண்டும் என சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியககே தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் வேட்புமனு பட்டியலில் அடுத்ததாக இருக்கும் உறுப்பினர் தான் எனவும் அதனால் தனக்கே கிடைக்க வேண்டும் என லியனகே குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையாளரினால் தனது பெயர் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தான் தற்போது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதனால், நிவித்திகல ஆசனத்தின் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளராகுவதற்கும் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர்பதவி கிடைத்தாலும் தான் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலகுவதாக இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் சனி ரோஹன கொடிதுவக்கு இந்த பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
57 வயதான ரஞ்சித் சொய்ஸா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment