Header Ads



'காட்டுமிராண்டித்தனமானவர்' என்றாராம் சல்மான் - சவுதி கடன்பட்டிருக்கிறது என்கிறது அமெரிக்கா

அமெரிக்க கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சௌதி மாணவரை "காட்டுமிராண்டித்தனமானவர்" என்று சௌதி அரேபியாவின் மன்னர் சல்மான் கண்டித்துள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

சௌதி மன்னர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்குமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டார் என அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

''செளதி அரேபியாவின் மன்னர் சல்மான் தனது இரங்கலைத் தெரிவித்து, தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது அனுதாபங்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்'' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சௌதி அரசாங்கம் "கடன்பட்டிருக்கிறது" என்று ஃப்ளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கூறினார்.

1 comment:

Powered by Blogger.