ரஞ்சனை விலக்குமாறு, ரணிலிடம் கோரிக்கை
ஐக்கிய தேசியக்கட்சியில் தமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் சிறிய கட்சி ஒன்றின் சார்பில் தாம் போட்டியிடவுள்ளதாக கம்பஹா நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிய கட்சிகள் பலவும் தம்மை போட்டியிட வருமாறு கோரியுள்ளன. சரத் மனமேந்திரா மற்றும் சுசில் கிடெல்பிட்டிய போன்றோர் தம்முடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தம்மை கட்சியில் இருந்து விலக்குமாறு தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை என்றுக் கூறியுள்ள ரஞ்சன் ராமநாயக்க, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அதில் அடங்குவதாக தெரிவித்துள்ளார்.
சட்டத்துறை பரீட்சைக்காக ஆங்கில பாடத்தில் சிறப்பு சித்தி தேவை என்பதால் நேற்று கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சையில் தோற்றிய பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கே ரஞ்சன் ராமநாயக்க இந்த பதில்களை வழங்கினார்.
Post a Comment