ஜனாதிபதி கோத்தாபயவை கொலைசெய்ய சதி - 5 இளைஞர்கள் கைது
(எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உருப்பினர் ஒருவரை கொலைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்று வாழக் கூடிய சூழலும் கிடைக்கும் எனவும் கூரி சிலருடன் இணைந்து கொலை சதித் திட்டம் தீட்டியதாக தெரிவித்து ஐந்து இளைஞர்களை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந் நிலையில் அவர்களில் நால்வரை விடுவித்த நீதிமன்றம் பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தபப்டும் சந்தேக நபரை மட்டும் 72 மணி நேரம் தடுப்பில் வைத்து விசாரிக்க கட்டுநாயக்க பொலிஸாருக்கு இன்று -04- அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை நீதிவான் கேசர சமரதிவாகர இதன்கான அனுமதியை இன்று மாலை வழங்கினார். அதன்படி வாழச்சேனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரை தொடர்ந்து தடுப்பில் வைத்து விசாரிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
கடந்த திங்களன்று கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பொருப்பதிகாரி , உப பொலிஸ் பரிசோதகர் இந்திக தலைமையிலான குழுவினர், சீதுவை - ஜயவர்தனபுர , அமந்தொழுவை பகுதியில் வாடகையில் பெற்ற வீட்டடில் தங்கியிருந்த ஐவரைக் கைது செய்தனர்.
வாழச்சேனை , கிளிநொச்சி- அக்காரயன்குளம் , விஷ்வமடு - தர்மபுரம் விஷ்வமடு - கல்லாரு மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்களில் மேலதிக விசாரணையின் பின்னர் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் புலிப் பயங்கரவாதம் உள்ளதுக்கு இது ஒரு சாட்சி
ReplyDeleteEverything drama
ReplyDeleteஇச்சம்பவத்துக்கு புலிச்சாயம் பூசுவது ஆச்சரிஅமாக இருக்கு. கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஓட்டமாவடி மீராவோடையை சேர்ந்த முஸ்லிம் இளைஞரும் மூன்று தமிழ் இளைஞர்களும் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளனர். அவர்கள் போதையில் தமிழில் பேசிக்கொண்டிருந்தது பற்றிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு தமிழ் இளைஞர்களும் பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளனர். ஓட்டமாவடி மீராவோடையை சேர்ந்தவரை குற்றப் பிண்ணணி இருப்பதாகக் கூறி 3 நாள் மேலதிக பொலிஸ் விசாரணைக்காக தடுத்துவைத்துள்ளனர்.
ReplyDeleteஇஸ்ரேலிய சிந்தனை கொண்ட பாசிச புலிகளுக்கு மாற்றான் உயிர்களையும் காணிகளையும் கபளிகரம் செய்வது என்பது இயற்கைச் சுபாவம்.
ReplyDeleteஊட்டி வளர்த்த ரஜீவ்காந்தியையே கொன்றொழித்த படுபாதகர்கள்.
இப் பயங்கரவாதிகளது வேர் எங்கெல்லாம் பரவியுள்ளதோ அங்கெல்லாம் அதனை அறுத்து எறிவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
இலங்கையில் இவர்களை துடைத்தெறிவதற்கு பாகிஸ்தானை பயன்படுத்தியது போன்று ஏனைய முஸ்லிம் நாடுகளின் உதவிகளை பெற வேண்டும். இவ்விடயத்தில் இரட்டை வேடதாரியான இந்தியாவின் மூக்கை நறுக்க வேண்டும்.