ஒரு இறாத்தல் பாணின் விலையை 50 ரூபா வரை குறைக்கலாம் - பேக்கரி உரிமையாளர் சங்கம்
எதிர்வரும் நாட்களில் பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலையையும் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
போட்டித்தன்மையுடன் கூடிய விலையில் கோதுமை இறக்குமதி செய்யப்படுமாயின், ஒரு இறாத்தல் பாணின் விலையை 50 ரூபா வரை குறைக்க முடியும் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 5 ரூபாவினால் குறைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
இறக்குமதி செய்யப்படுகின்ற கோதுமை மாவுக்கான ஒன்றிணைந்த தீர்வை வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, 36 ரூபா ஒன்றிணைந்த தீர்வை வரியை நீக்கி அதற்குப் பதிலாக 8 ரூபா விசேட வர்த்தகப் பொருட்கள் வரியை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்தே, அகில இலங்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
Post a Comment