குளவிகளுக்கு வந்த கோபத்தினால் 50 பேர் பாதிப்பு, 28 பேர் வைத்தியசாலையில் அனுமதி.
- கே.சுந்தரலிங்கம் -
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை மண்ராசி பகுதியில் குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 50 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதுடன்.28 பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்டவர்களில் 15 சிறுவர்களுகளும் 11 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் இன்று (14) திகதி 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது
சும்பவம் தொடர்பாக தெரியவருவதாவுது மண்ராசி விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் திடீரென கழுகு ஒன்று குளவிகளின் கூட்டை தாக்கியுள்ளது.அதில் களைந்த குளவிகள் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களையும் அயலில் உள்ள தொடர் குடியிருப்பில் இருந்தவர்களையும் வீதியில் சென்றவர்களையும் சரிமாறியாக தாக்கியுள்ளன.
விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களை குளவிகள் கடுமையா தாக்கியதனால் அங்கிருந்து அல்லோல கல்லோப்பட்டு சிறுவர்கள் தெறித்து ஓடியுள்ளனர.; சிலர் குளவிகளின் தாக்குதலை தாங்கிக்கொள்ள முடியாது அயலில் இருந்த ஆற்றில் குதித்த தாகவும் சம்பவத்தினை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.
தொடர் வீடுகளுக்கு குளவிகள் வந்து வீட்டில் இருந்துவர்களையும் தாக்கியதனை தொடர்ந்து, பலர் வீட்டு வாசலில் தீ யிட்டு குளவிகளின் வருகையினை கட்டுப்படுத்தியுள்ளனர்.
அதனை தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளானவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில் பெரும் பாலானோர்;. வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
பொது மக்கள் வாழும் இடங்களுக்கு மற்றும் சமூக நிறுவனங்களான வைத்தியசாலைகள்,விளையாட்டு மைதானம்,பாடசாலைகள்,நகரங்கள் போன்றவற்றிக்கு அருகாமையில் காணப்படும் குளவி கூடுகளை உடனடியாக அகற்றப்பட வேண்டும.; என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Post a Comment