3 மாதங்களுக்குள் அரசாங்கத்தில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்பவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடமுடியாது
அரசாங்க சார்பு ஊடக நிறுவனமான லேக் ஹவுஸின் எசோஸியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் தலைவராக பொறுப்பேற்கவுள்ளதாக வெளியான தகவலை ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் சரித்த ஹேரத் மறுத்துள்ளார்
தாம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளமை காரணமாக இந்த பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 3 மாதங்களுக்குள் அரசாங்கத்தில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்பவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடமுடியாது என்ற இணக்கம் பொதுஜன பெரமுனவின் உள்ளக கட்டமைப்பில் உள்ளது.
இதன்காரணமாக தாம் குறித்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ள சரித்த ஹேரத் பொதுத்தேர்தலில் குருநாகலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment