டுபாயில் கைதான 3 சிங்களவர்களும் முஸ்லிம்களுக்கோ, இஸ்லாத்திற்கோ எதிராக கருத்து வெளியிடவில்லை.
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்ட டுபாயில் பணிபுரியும் மூன்று இலங்கையர்களுக்கு எதிராக அந்நாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தலையிட்டு அவர்களுக்கு உயிர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எல்பிலிபிட்டியவில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது. இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சில கருத்துக்களைப் பதிவுசெய்த டுபாயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகப் பணிபுரியும் மூன்று இலங்கையர்களுக்கு எதிராக பொலிஸாரால் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. என ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்தது.
இந்த தாக்குதல் அப்பாவி மக்கள் மீதே மேற்கொள்ளப்பட்டது. சமாதானத்தை விரும்பும் உலக மக்கள் அனைவரும் இதனை எதிர்த்தனர். இந்த மூன்று இலங்கையர்களும் வெளியிட்ட கருத்துக்களும் சாதாரணமானவை.
முஸ்லிம்களுக்கு எதிராகவோ இஸ்லாத்துக்கு எதிராகவோ நாமும் அந்த மூன்று இலங்கையர்களும் கருத்துவெளியிடவில்லை. சமயத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்தையே அவர்கள் எதிர்த்தார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்கள் இஸ்லாத்துக்கு எதிரான கருத்தாக எவரும் கருதக்கூடாது.
வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என எம்மால் கூறமுடியாது. என்றாலும் அரசாங்கம் என்ற வகையில் இவ்விவகாரத்தில் தலையிடலாம். டுபாயிலுள்ள இலங்கைத் தூதரகம் இவ்விடயத்தில் தலையிட்டுள்ளதாக நான் அறிகிறேன். டுபாயில் பணிபுரியும் மூவரும் இலங்கையில் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தைப் பராமரிப்பதற்காக அந்நாட்டுக்குச் சென்றுள்ளவர்கள். எமக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருபவர்கள். இலங்கையின் பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச்செய்யும் இவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும்.
டுபாயிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் இவர்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கப்பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அமெரிக்காவில் அல்கைதா தாக்குதல்களை மேற்கொண்டபோது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதல்களின் போதெல்லாம் உலக முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் எதிர்ப்பு வெளியிட்டார்கள். அது போன்ற ஒரு தாக்குதல் இலங்கையில் மேற்கொள்ளப் பட்ட போது அதனை எதிர்த்தமை தவறல்ல. அவ்வாறு எதிர்ப்பு வெளியிட்ட இலங்கையர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் வராத வகையில் உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்றார்.-Vidivelli
ஏ.ஆர்.ஏ.பரீல்
தாக்குதலக்கு எதிரான கருத்துகளை வெளிட்டு இருந்தால் அவர்களை AC Flight ல் அனுப்பிவைப்பார்கள்.
ReplyDeleteநாங்களும் தான் தாக்குதலுக்கு எதிராக கருத்து வெளியிட்டோம். அப்போ ஏன் எங்கள கைது செய்யல்ல.
ReplyDeleteபொழப்புக்கு போன இடத்துல வாய வெச்சிக்கி சும்மா இருந்தா என்ன.
எனக்கு ஒரே ஒரு கவலை அங்கே பொழப்பிற்காக ஒட்டகம் மேய்க்க போன எத்தனையோ தமிழ் பயங்கரவாதிகள் இஸ்லாத்திற்கு எதிராக கேவலமான விமர்சனங்களை முன் வைக்கின்றனர். அவர்களுக்கு துதிராக புகாரளிக்க முஸ்லிம்கள் முன் வராதது வேதனையளிக்கிறது
ReplyDelete