30 தூதுவர்களை, நாடு திரும்புமாறு உத்தரவு
வெளிநாடுகளில் தூதுவர்களாக கடமையாற்றும் 30 இலங்கையர்களின் சேவையை முடிவுக்கு கொண்டு வர வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தூதுவர்கள் அனைவரும் டிசம்பர் 30 ஆம் திகதிக்குள் இலங்கை திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் அரசியல் மற்றும் தனிப்பட்ட நெருக்கம் காரணமாக தூதுவர்களாக நியமிக்கப்பட்டவர்களையே திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த தூதுவர்கள் தமது கடமைகளை சரியாக செய்தனரா என்பதை கண்டறிய விசாரணைகளை நடத்தவும் வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தூதுவர்கள் நீக்கப்படுவதால், ஏற்படும் வெற்றிடங்களுக்கு புதிய அதிகாரிகளை அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதிக்குள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் ராஜதந்திர விவகாரங்கள் சம்பந்தமாகவும் சர்வதேச தொடர்புகள் குறித்து அனுபவமிக்க நபர்கள் வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.
எனினும் தற்போது அரசியல் மற்றும் தனிப்பட்ட நெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தூதுவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், ஜனாதிபதி மற்றும் அரசாங்கங்கள் மாறும் போது தூதுவர்களும் மாற்றப்படுவது இயல்பானது.
Post a Comment