முஸ்லிம் காங்கிரஸின் 3 MPக்கள், அரசோடு சங்கமிக்க போகிறார்களா..?
- AL.THAVAM -
"வடக்கு - கிழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது" - இது கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தெளிவாக சொல்லிவிட்ட செய்தி .
அதாவது, ஏனைய உதிரிகள் - ஒரு அமைச்சினை OR ஒரு இராஜாங்க / பிரதி அமைச்சினைOR ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினரை OR ஒரு ஆளுனரை OR ஒரு திணைக்கள தலைவரை OR ஒரு வெளிநாட்டு தூதுவரை OR ஒரு இணைப்பாளரை பெற - பத்து / ஐநூறு வாக்குகளை வைத்திருப்பவர்களே - என்ற செய்தியை உறைக்க சொல்லிவிட்டது.
அதனை ஜனாதிபதியும் மிகத்தெளிவாக புரிந்துவிட்டதாகவே தெரிகிறது. அதனால்தான், உதிரிகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து உரிய பங்குகள் கொடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் குமுறலாக ஆங்காங்கே வெளிப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது.
அது மறுபுறம், சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோர் மீதான கோபக்கணையாக பாய்வதையும் உணரக்கூடியதாக உள்ளது. அதனால், இயலாமையின் உச்சக்கட்டத்தில் - இவனுகள் பிழை - தலைமைகளை நிராகரிக்க வேண்டும் - பெரும்பான்மை தெரிவிற்கு பின்னாலேயே போக வேண்டும் - கிழக்கில் தலைவர் வேண்டும் - என்றெல்லாம் புலம்பல்கள் நமது எல்லோரினதும் காதுகளில் ஒலித்தன.
ஆனால், அதற்கு மாற்றமாக சமூக உணர்வுள்ள புத்திஜீவிகள் - "எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்க சிறுபான்மை சமூகம் முன்னரிலும் விட இன்னும் பலமாக ஒன்றிணைய வேண்டும்" - என்ற கருத்தை முன்வைத்த போது - இவர்களின் புலம்பல்கள் பொய்த்துப்போய்விட்டதை உணர்ந்து கொண்டனர்.
இப்போது - "முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் - கட்சியை உடைத்து கொண்டு அரசோடு சங்கமிக்க போகிறார்கள்" என்றொரு புதிய புரளியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.
அதிலும் - "வடக்கு - கிழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது" என்ற தெளிவான செய்தியை - கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெளிவாக சொல்லியிருக்கின்ற சூழலில் - முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் - கட்சியை உடைத்து கொண்டு அரசோடு சங்கமிக்க நினைக்கிறார்கள் என்று சொல்லுகின்ற வாதம் - எவ்வளவு முட்டாள்தனமானது என்பதைக்கூட புரிந்துகொள்ளாமல் - புரளிகிளப்புவதை என்னென்று சொல்வது. பாவம் அவர்கள் என்று மனதுக்குள் பச்சாபப்படுவதை தவிர.
இன்னும் 04 or 05 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் என்றாலும் பரவாயில்லை - அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்களே இருக்கின்ற சூழலில் - இப்படியான ஒரு முடிவிற்கு வருவது தற்கொலைக்கு சமனானது என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாதவர்களா இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதை - சிறுபிள்ளைத்தனமான புரளிகிளப்புபவர்கள் விளங்கிக்கொள்வதில்லையா?
இது - இயலாமையின் உச்ச கட்டம். எதிரி வென்றுவிட்டால் - அவனுக்கு மரணம் வராதா? சுகவீனமுற மாட்டான? அவர்களுக்குள் குழப்பம் வராதா? என்று எண்ணுவதெல்லாம் - இயற்கையாக வருகின்ற உளவியல் தாக்கம்தான். இது எல்லோருக்கும் வருவதுதான். இதற்கு மருந்து வெளியில் இல்லை. அவரவர்களுக்குள்ளேயே இருக்கிறது.
வேறொன்றுமில்லை, நன்றாக படுத்து - நித்திரை கொண்டு - எழுந்து குளித்துவிட்டு - "எனது மனதிற்கு நிம்மதி தா" என்று பள்ளிவாயலுக்குள் போய் இருந்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுதான். மனக்குழப்பம் யாருக்குத்தான் இல்லை. போய் மருந்தை செய்யுங்கள்.
Jaffna Muslim, Please do not publish this kind of stupid articles.
ReplyDeleteMr தவம் வடக்கு, கிழக்கு சம்பந்தன், ரிஷாட்,ஹக்கீம் கைகளில் இல்லை. இவர்கள் பிரச்சாரம் செய்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ் முஸ்லிம் மக்கள் ஏற்கனவே தீர்மாணித்துவிட்டார்கள். தபால் மூல வாக்குகள் இதனை தெளிவாக காட்டியுள்ளன.அப்ப பயப்படாமல் எல்லா மாவட்டத்திலும் உங்களால் தனித்துப் போட்டியிட முடியுமா?
ReplyDeleteததேகூ வின் தலைவரின் பெயர் சம்மந்தன் அல்ல. சம்பந்தன் அல்லது சம்பந்தர். நக்கலுக்கு சொல்வதுபோல் இருக்கினறது. பெயரை எழுதுவதற்கு முதலில் அந்தப் பெயர் எப்படி எழுத வேண்டுமென்று தெரிந்திருத்தல் வேண்டும். Amjy சொல்வதுபோல் முகா வினால் கிழக்கில் மட்டுமல்ல தீவின் எத் தொகுதியிலாவது தனித்து களமிறங்க முடியுமா? முகாவிற்கு தலைமைத்துவப் பிரச்சினை மாத்திரமே இருக்கின்றது. தலைமைத்துவத்தின் கருத்து களுக்கு எதிராக கருத்தைச் சொன்னால் அவரகள் அம்பேல் தான். அம்பாரை மாவட்த்திலிருந்து மட்டுமல்ல கிழக்கிலிருந்தும் எத்தனைபேர் இதுவரை ஓரம் கட்டப்பட்டு விட்டனர் நாட்டு மக்கள் தெளிவானவரகள்தான். கிழக்கு மக்களும் மிகத் தெளிவானவரகள். அதன் பிரதிபலிப்பு வரும் தேர்தலில் நன்கு புலப்படும்.
ReplyDeleteஎனக்கு நீண்ட காலமாக ஒரு சந்தேகம். அதை யாராவது தீர்த்து வைக்க முடியுமா?
ReplyDeleteதவம், இவர் முஸ்லிம் காங்கிரசு என்றுதான் இதுவரை நினைத்தேன். ஆனால் இந்த பந்தியின் உள்ளடக்கம் என்னை குழப்பி விட்டது.
இவர் தமிழ் கட்சியா? முஸ்லிம் கட்சியா?