யாரும் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை, ஏமாற்றமடைந்த மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக வரமாட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 3 மாத காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட மாட்டார். எனினும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மைத்திரி போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற ரீதியில் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வார் எனவும் ஊழலற்ற தலைவராக தொடர்ந்து செயற்படுவார் எனவும் பொதுச் செயலாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் மைத்திரி நாடாளுமன்றம் வருவதற்கு தயாராக இருந்த போதிலும் அவருக்காக பதவி விலகுவதற்கு எவரும் தயார் இல்லை என தெரியவந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பலரிடம் கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக ஏமாற்றம் அடைந்த மைத்திரி பொலநறுவை நோக்கி பயணமாகி உள்ளார்.
Post a Comment