சஜித் 2 நாள் மட்டுமா,, எதிர்க்கட்சி தலைவர்...?
எதிர்க்கட்சி தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் காலப்பகுதியில் இரண்டு நாடாளுமன்ற அமர்வுகளில் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்ட தொடர் கடந்த 3ம் திகதி ஆரம்பமாகவிருந்த நிலையில், ஒரு மாத காலத்திற்கு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம்பிரதாயப்படி நாடாளுமன்ற அமர்வுகளை புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச ஆரம்பித்து வைப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2020 ஜனவரி 03ம் திகதி நடைபெறும். இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சபாநாயகர் அக்கராசனத்தில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைப்பார்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் பெயரிடப்படுவார். இந்நிலையில், ஜனாதிபதியின் சிம்மாசன உரைக்கு பின்னர் நாடாளுமன்றம் சுமார் இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதனால் மார்ச் மாதமளவிலேயே நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment