இப்படி நடந்திருந்தால் 2 வது விருப்பு வாக்குகளை, எண்ண வேண்டியேற்பட்டு சஜித் வெற்றி பெற்றிருப்பார்
ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழங்கி வரும் ஆதரவை சிலர் தரம் தாழ்த்துவதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மித்தெனிய பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் இதனை செய்யவில்லை எனவும் இரண்டாம் வரிசையில் உள்ளவர்கள் இதனை செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச 14 லட்சம் மேலதிக வாக்குகளில் வெற்றி பெற்றார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் கிடைத்திரு்க்காவிட்டால் அந்த வெற்றியை பெறுவது சிரமம்.
அப்படி நடந்திருந்தால், இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டு சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருப்பார் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment