Header Ads



காணாமல் போயிருந்த 2 பேர், ஜனாசாக்களாக மீட்பு

கடந்த 08/12/2019 அதவாவது நேற்று முன்தினம் கிண்ணியா உப்பாறு கடலில் படகு கவிழ்ந்த ஐவரில் மூவர் மீட்கப்பட்ட நிலையில் ஒரூவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இருவர் மாயமாகியுள்ளனர். இரு சடலங்களும் இன்று (10) காலை உரிய கடற்பரப்பில் மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறுமீட்கப்பட்ட சடலங்கள் கிண்ணியா-03, மாஞ்சோலை எனும் முகவரியைக்கொண்ட முஹம்மது ஹாமின் வயது (39) எனவும் ,  கிண்ணியா மஃறூப் நகர் எனும் முகவரியை கொண்ட சஹீப் வயது (29)எனவும் இரு குடும்பஸ்தர்கள் எனவும் தெரியவருகிறது

சடலங்களை கிண்ணியா தளவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.