Header Ads



ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ள 200 முதல் 300 பேர் இலங்கையில் இருந்தனர்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் கிடைக்க பெற்ற புலனாய்வு தகவல் தெளிவானது அல்லவென சில பொறுப்பு வாய்ந்தவர்கள் கூறினாலும், அவை நம்பத்தகுந்த புலனாய்வு தகவல் என சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விஷேட நிபுணத்துவரான பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஊடாக, அந்தத் தாக்குலை தடுத்திருக்க வாய்ப்பு இருந்ததாக அவர் குறிபபிட்டுள்ளார்.

நாட்டில் சர்வதேச பயங்கரவாத குழு இயங்குவதாக கடந்த 2016 ஆம் ஆண்டு நாளிதழ் ஒன்றுடன் இடம்பெற்ற நேர்காணலின்போது பேராசரியர் ரொஹான் குணரத்ன வெளியிட்ட கருத்து தொடர்பில் இதன்போது வினவப்பட்டுள்ளது

அதற்கு பதிலளித்த அவர், அந்த வருட காலப்பகுதியிலும் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த 200 முதல் 300 பேர் வரையிலானோர் இலங்கையில் இருந்ததாக தமக்கு தகவல் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தாக்குதல் தொடர்பில் கிடைத்த சில தகவல்கள் தெளிவற்றது என பொறுப்பு வாய்ந்தவர்கள் கூறியமை தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர், போராசிரியர் ரொஹான் குணரத்னவிடம் வினவினார்.

அதற்கு பதிலளித்த அவர், தாக்குதலை மேற்கொள்ளும் குழு, அது நடாத்தப்படும் தினம், அதன் நோக்கம் மற்றும் தாக்குதலின் தன்மை என்பன தொடர்பில் தெளிவான புலனாய்வு தகவல் கிடைக்க பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு தெளிவுப்படுத்தப்பட்டிருந்தால், உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளை இரத்துசெய்து தாக்குதலை தடுத்திருக்க முடியும் அவை நம்பத்தகுந்த புலனாய்வு தகவல் என சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விஷேட நிபுணத்துவரான பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Send our Farmer /Former President inside bar and investigate about it.

    ReplyDelete

Powered by Blogger.