வெள்ளை வேன் சாரதிகளாக, செயற்பட்ட 2 பேர் கைது - CID அதிரடி வேட்டை
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வௌ்ளை வேன் ஓட்டுனர்கள் என்று தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் மஹர பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இருவரில் ஒருவர் வௌ்ளை வேன் ஓட்டுனராக கடமையாற்றியதாகவும் மற்றும் ஒருவர் எல்.ரி.ரி.ஈ ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் இருந்து தங்கத்தினை எடுத்துவருவதற்கு ஒத்தழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்திருந்தனர்.
Post a Comment