Header Ads



மண்மேடு சரிந்து விழுந்ததில், ஒரேகுடும்பத்தில் 2 பேர் மரணம் - 2 பேரை காணவில்லை


வலப்பனை பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட  ஹங்குராங்கெத்த- வலப்பனை பிரதான வீதியில், நாகந்தலாவ - மலபத்தாவ எனுமிடத்தில், வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததால், இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.

நேற்று  (30) இரவு இடம்பெற்ற இவ் அனர்த்தத்தில்,  ஒரே குடும்பத்தை சேர்ந்த  நால்வரில் கருனாரத்ன வயது (16) என்ற சிறுவனின் சடலமும் மற்றொருவரின் சடலமுமே  மீட்கப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மண்சரிவில்  சிக்குண்டு காணாமல்போன நபர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவ இடத்துக்கு  விரைந்த இராஜாங்க அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க, மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

-ஆ.ரமேஸ்

No comments

Powered by Blogger.