ராஜபக்ஷ சகோதரர்கள் வசம் 154 அரச நிறுவனங்கள் - முஜிபுர் ரஹ்மான்
( ஆர்.விதுஷா)
ஜனாதிபதி கோத்தாபயராஜபக்ஷ,அவரதுமூத்த சகோதரர்களான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் 154 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்நிலையில் பல அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வந்துள்ள நிலையில் இதுவரையில் பாதுகாப்பு அமைச்சராக எவரும் இல்லை.
ஆகவே யார் பாதுகாப்பு அமைச்சர் என்பது தொடர்பில் அரசாங்கம் நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகோதாவில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பொறுப்பிலுள்ள அமைச்சுக்களுக்கு கீழான விடயதானங்கள் உள்ளடக்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. அதன் படி முப்படை , பொலிஸ் , மற்றும் அரச புலனாய்வு துறை ஆகியன உள்ளடங்கலாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சின் கீழ் இருந்த அரச நிறுவனங்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் பொறுப்பின் கீழ் 154 அரச நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி ஜனாதிபதி அமைச்சு பொறுப்பை வகிக்க முடியாது.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சராக எவரும் நியமிக்கப்படவில்லை. இருப்பினும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பல அரச நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என அவர் இதன்போது தெரவித்தார்.
Do you have any issues on this....???
ReplyDeleteAre you speaking this on behalf of UNP or Muslim community...????
Pleasr stop spoiling the community name with the grace of Almighty.
Do you Know How many departments were under Risath Bathurdeen...?????
What has happened in the central bank??
Please kindly resolve the issues in your internal party problem before talk in Public.
Do you have any issues on this....???
ReplyDeleteAre you speaking this on behalf of UNP or Muslim community...????
Pleasr stop spoiling the community name with the grace of Almighty.
Do you Know How many departments were under Risath Bathurdeen...?????
What has happened in the central bank??
Please kindly resolve the issues in your internal party problem before talk in Public.
It is he and his moron speeches which the muslim community in trouble. He does not.speak about Central Bank robbery which led the UNP to bankruptcy.
ReplyDeletevaya toranda MAHINDA & CO kora tedurai senjadu oru may***m illa, katchila adichi kondu savuranval, vakkalitha motha MUSLIM samugamum adutadu enna nadukkumo endu dinamum vazkai pogiradu..ada pathi pesa thuppila eppa pathalum MAHINDA GOTA ongada padam ellam MUSLIM community partu mudinji, iniyum onagala madri vayala vada sudrangala MUSLIM namburenda ada vida madamai edvum illa..MUSLIM area vil kuppai allada pirachinai pogudu adatku SAJITH ku vakalithadanal endu mulu nadum partka social media la ponadu adaku vaya torakka thuppilla
ReplyDeleteMr.Aliyar, please stop this kind criticism which lead you and me together with the community to the garbage. Please try to think of a constructive way where all could get to gather for the betterment of the community, This party politics will definitely lead to the community to the ruin and already we the members of the community are at the verge of collapse. وتعاونوا بالبر والتقوي ولاتعاونوا بالاثم والعدوان
ReplyDeleteஇதுல உனக்கு என்ன பிரச்சனை.முஸ்லிம்கள் மீது மேலும் பகையை உண்டாக்காமல் மக்களுக்குரிய வேலையைப் பார்.
ReplyDeleteபேசாம இருங்க 5 வருடத்திற்கு
ReplyDeleteFOR THE LAST, 4 HALF YEARS
ReplyDeleteWHAT DID U DO FOR,MUSLIMS.EXEPT
SHOUTING & TALKING NONSENSE.
UNNUDAYA ARASHANGATHIL
DIGANA UTPADA 30 MUSLIM OORKALUKKU
ANIYAYAM NADAKKUMPOTHU
THOONGIKONDU IRUNDEEYA ???
WAAI THIRAKKATHEY.
NEEYUM HAKEEM, RISHADAI PONRU
THUVESHATHAI KILARUPAVAN.