Header Ads



ஜனாதிபதியின் உத்தரவினால் 1000 மில்லியன், ரூபா பணம் விரயமாவது தடுக்கப்பட்டது

அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்காக புதிய வாகனங்கள் கொள்வனவு செய்வதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடுத்துள்ளார்.

இதன் காரணமாக வருடம் ஒன்றிற்கு 1000 மில்லியன் ரூபா பணத்தை மீதப்படுத்த முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த பணத்தை மக்களுக்கு வரி சலுகையாக வழங்குவதற்கும் ஏனைய சேவைகளுக்காக பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர்களுக்கு மாத்திரம் வாகனம் கொள்வனவு செய்வதற்காக 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் 3215 மில்லியன் ரூபா கணக்கிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு மாத்திரம் வாகனங்களுக்காக 1971 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

தற்போது ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் 2020ஆம் ஆண்டில் மாத்திரம் 1000 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வாகன காப்புறுத்திகாக செலவிடப்படவிருந்த 300 மில்லியன் ரூபாவுக்கு அதிக பணமும் மக்களுக்காக பயன்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

5 comments:

  1. ரனிலின் ஆட்சியில் இருந்த பின்வரிசை mpக்களைக் கூட அவரால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. இதனால் கேட்ட கேட்ட சலுகைகளை ஒவ்வொருவருக்கும் வழங்கிக் கொண்டே இருந்தார். உள்வீட்டு பிரச்சினைகளும் தலைக்கு ஏற ஏற மக்களை மறந்தார்.அதன் விளைவை தற்போது அனுபவிக்கின்றார்.
    ஆனால் மகிந்த அவர்களது கம்பனியில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா ஆக முடியாது.
    தேச மக்களின் நலனுக்காக மேலும் நலன்களை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  2. A Great Move toward building a nation to make the life of average citizen to bring up

    ReplyDelete
  3. You are Excellency,
    Every moments towards the country's progress is amazing its people, very well, good job congratulations.

    ReplyDelete

Powered by Blogger.