பொய்களைக் கூறியே பௌத்த, பிக்குகள் எம்மை தோற்கடித்தனர் - UNP
எம்.சீ.சீ. என்ற மில்லேனியம் சேலேஞ் கோப்ரேஷன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமா இல்லையா என்பதை அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்குமாறு அரசாங்கத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி சவால் விடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியராச்சி இந்த சவாலை விடுத்துள்ளார்.
எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பாக பொய்யான தகவல்களை பிரசாரம் செய்து கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக தற்போதைய அரசாங்கத்தில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் மில்லேனியம் சேலேஞ் கோப்ரேஷன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்களா? இல்லையா?. இந்த உடன்டிக்கை மூலம் நாடு பிளவுபடும் என்று கூறிய காரணத்தை தயது செய்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.
பொய்களை கூறி பௌத்த பிக்குகள் உள்ளிட்டோர் எம்மை தோற்கடித்தனர். இந்த தோல்வியை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
திருத்தம் செய்து கொண்டு வரப் போவதாக தற்போது கூறுகின்றனர். அந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட மாட்டாது என விமல் வீரவங்ச கூறுகிறார் எனவும் விஜயபால ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment