"பௌத்த தேரர்களுக்கு UNP வழங்கிய துன்புறுத்தல்களுக்கு, மக்கள் சரியான பதிலடி வழங்கியுள்ளனர்
எங்களுக்கு மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குங்கள் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிமன்றில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக இன்று -25- முன்னிலையாகிய நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சி, சிறுபான்மையின மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து பௌத்த தேரர்களுக்கு துன்புறுத்தல்களை மேற்கொண்டனர்.
இந்த துன்புறுத்தல்களுக்கு பொதுமக்கள் சரரியான பதிலடியை வழங்கியுள்ளனர்.
நாம் மத வழிபாடுகளில் நிம்மதியாக ஈடுபடுவதற்கு, சட்ட மா அதிபர் திணைக்களம் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
இணக்கச் சபையினால் கூட விசாரணைக்கு உட்படுத்தப்படாத வழக்குகளே தொடரப்பட்டுள்ளன. இவ்வாறான வழக்கு விசாரணைகள் எமக்கு பெரும் தொல்லையாக அமைந்துள்ளன.
ஆளும் கட்சிக்கு தலைவலியாக மாறும் போது அவ்வாறானவர்களை சட்டத்தைக் கொண்டு கட்டிப் போடுவது அடிப்படை உரிமை மீறலாகும். இவ்வாறான பாரதூரமான பிரச்சினையொன்றையே நாம் எதிர்நோக்கியுள்ளோம்.
பௌத்த பிக்குகளை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
Post a Comment