UNP யின் தற்காலிக தலைவராக கரு? சஜித், கபீரின் இடங்களுக்கு நவீன், தயா, ரவியை நியமிக்க முஸ்தீபு
ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்பை செய்யத் தீர்மானித்துள்ள கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , கட்சியில் தற்போது எழுந்துள்ள நெருக்கடியை தணிப்பதற்காக தலைவர் பதவியை தற்காலிகமாக சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்க ஆலோசித்து வருகிறார்.
சபாநாயகர் பதவிக்கு வாசுதேவ நாணயக்கார எம் பியை நியமிக்க ஆளுங்கட்சி ஆலோசித்து வரும் நிலையில் ,ரணில் இவ்வாறு கருவை தற்காலிக தலைவராக நியமிக்க பரிசீலனை செய்து வருகிறார்.
அதேபோல் கட்சியில் வகிக்கும் பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள எம் பிக்களுக்கு மீளவும் அந்த பதவிகளை வழங்காதிருக்கவும் ரணில் உத்தேசித்துள்ளார். இதன்படி சஜித் ,கபீர் ஹாசிம் ஆகியோருக்கு அவர்கள் வகித்த பதவிகள் மீள வழங்கப்படுமா என்பதில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது .
இதற்கிடையில் நவீன் திஸாநாயக்கவுக்கு பிரதித் தலைவர் பதவியையும் ரவி கருணாநாயக்க அல்லது தயா கமகேவுக்கு தவிசாளர் பதவியை வழங்குவதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க – ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக மாற்று அரசியல் அணியொன்றை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவை வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட அனுமதி வழங்காதிருக்கவும் ரணில் தீர்மானித்துள்ளதாக அறியமுடிந்தது.
Sivarajah Ramasamy
முதலில் ரனிலை அனுப்ப வேண்டும் வீட்டுக்கு.
ReplyDeleteUnb ட நிலைமை சுதந்திர கட்சியின் நிலைமைதான்...
ReplyDeleteரணில் என்னும் கிழட்டு நரி ஐ.தே.கட்சியை வழிநடத்தும் காலமெல்லாம் மகிந்த கொம்பனியின் காட்டில் மழைதான்.
ReplyDeleteஇனி ஹக்கீமுக்கும் ரிசாத்திற்கும் அம்போதான்.