Header Ads



UNP கூட்டத்தில் அமளிதுமளி, ரணிலுக்கு எதிராக போர்க்கொடி - ஆத்திரத்துடன் எச்சரித்த ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று -18- பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியபோது பெரும் அமளி ஏற்பட்டது.

ரணில் பிரதமர் பதவியிலிருந்து விலகி கட்சித் தலைவர் பதவியையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் சஜித்துக்கு வழஙகவேண்டுமென சஜித் ஆதரவு எம் பிக்கள் தர்க்கம் செய்ததையடுத்தே இந்த அமளிதுமளி ஏற்பட்டது.

சுஜீவ சேனசிங்க , கபீர் ஹஷீம் உட்பட்ட எம் பிக்கள் இவ்வாறு போர்க்கொடி தூக்கியதுடன் , 25 வருடகாலம் இந்தப் பதவிகளை வகித்துவரும் ரணிலால் நிலையான ஆட்சியொன்றை ஏற்படுத்த முடியாமல் போனதாக குற்றஞ்சாட்டினர்.

ஆனால் ரணிலுக்கு ஆதரவாக சரத் பொன்சேகா , ராஜித ,தயா கமகே , விஜிதமுனி சொய்சா ஆகியோர் பேசியதால் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

இங்கு கடுந்தொனியில் பேசிய ரணில் ,

“ நான் ஜனதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் பேசிய பின்னர் தேர்தல் தொடர்பில் ஒரு முடிவை எடுப்பேன்.

நான் இங்கு கதைக்க தொடங்கினால் பல விடயங்களை சொல்ல வேண்டி வரும். தேர்தலில் ஏன் தோல்வியடைந்தோம் என்பதனை கண்ணாடி முன் நின்று ஒவ்வொருவரும் கேட்டுப் பாருங்கள்.அப்போது பதில் கிடைக்கும். நான் பேசினால் பல விடயங்களை சொல்ல வேண்டிவரும்..” – என்றார்.

இந்த அமளிகளுக்கு மத்தியில் எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் முடிவடைந்தது.

இன்றைய கூட்டத்தில் சஜித் கலந்துகொள்ளவில்லை .

-Sivarajah-

4 comments:

  1. present day politicians expect quick money quick wealth quick sucees without a proper understanding of events and they fail to learn anything from the history. if it was not ranil the government would have fallen in 2018,

    ReplyDelete
  2. ரணில் பொன்னையன்..
    சூடு சொறன கெட்ட கேவலமான நாய்..நாயை விடவும் கீழானவன்..இவன பெற்கல.. நாய் ட காலுக்கு கீழே தான் பிறந்தான்.

    ReplyDelete
  3. there should be a ethical standard when publishing comments

    ReplyDelete
  4. Shameful Ranil's other plane is to fail in General Election.
    Sham of Ranil and his supporters...

    ReplyDelete

Powered by Blogger.