UNP 4 அணிகளாக பிரியும், தலைவர்கள் சிதறியுள்ளனர், 20 ஆண்டுகளுக்கு பொருத்தமுடியாது
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் முதுகெலும்பில்லாத நடவடிக்கைகள் காரணமாக அந்த கட்சி பிளவுப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -19- செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி நான்கு அணிகளாக பிரிந்து விடும். இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கு முதுகெலும்பு பலமில்லை என்பதை காண முடிகிறது. 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த போது அவர் தளராது இருந்தார். அவருடன் இருந்தவர்களும் தளராது இருந்தனர்.
எனினும் தற்போது ஏற்பட்டுள்ள தோல்வியால் ஐக்கிய தேசியக் கட்சியினர் தலைமறைவாகியுள்ளனர். ராஜித, பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றோர் எங்கே?.
இவர்களில் வெளியில் வந்து தற்போது பேச வேண்டும். ஜன்னலில் தொங்கவிட போவதாக கூறிய சரத் பொன்சேகா எங்கே?. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் சிதறி போயுள்ளனர். அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியை பொருத்த முடியாது எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment