ரணிலுக்கான STF பாதுகாப்பு நீக்கம் - சஜித்திற்கான பாதுகாப்பு தொடருகிறது
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட அதிரடிப்படையினர் வாபஸ் பெறப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்களின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் விலக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மலிக் சமரவிக்கரம, திலக் மாரப்பன ஆகியோரின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் விலக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பு விலக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment