சஜித்தை Pad Man என அழைக்கலாமா...?
pad பற்றி பொது வெளியில் கதைப்பதை bad ஆகவே இன்னும் பலரும் பார்க்கின்றார்கள். உறிஞ்சும் தன்மை கொண்ட மாதவிடாய்த் துவாய்கள் பெண்கள் மாதவிடாய் நாட்களின் போது போது இரத்தக் கசிவு ஆடைகளில் படியாதிருக்கப் பயன்படுத்துன்றனர்
இது பெண்ணின் உள்ளாடைக்கும் பிறப்புறுப்புக்கும் இடையில் அணியப்படுகின்றது
பொருளாதாரத்தால் நலிவடைந்த பெரும் பகுதியில் வாழும் பெண்களுக்கு
அவற்றை வாங்கி பயன் படுத்த முடியாத நிலையே உள்ளது
இலங்கையில் பெண்கள் பயன்படுத்தும் மாதவிடாய் துவாய்களுக்கு 101.2 சதவீத வரி அறவிடப்பட்டது எனினும் 2018 செப்டம்பர் மாதமளவில் சமூக வலைத்தளங்கள் ஊடக எழுந்த எதிர்ப்பின் காரணமாக அது 61 வீதமாக குறைக்கப்பட்டது இருந்தாலும் கூட 60 சத வீதமான வரி இன்று வரை அறவிடப்படுகிறது
இலங்கையின் சனத் தொகையில் நூற்றுக்கு 52 சத வீதமானவர்கள் பெண்கள் இருந்த போதிலும் அதிகமான பெண்கள் மாதவிடாய் துவாய்களை பயன் படுத்த முடியாமலுள்ளது
இலங்கையில் வறுமைக்கோட்டிற்குள் உள்ள நூற்றுக்கு 20 சதவீதமான வீட்டு உரிமையாளர்களின் சராசரி வருமானம் 24843/÷ ருபாய் ஆகும்
இவ்வாறான நிலையில் வீட்டு உரிமையாளர்களால் மாதவிடாய் துவாய்கள் கொள்வனவிற்கு தமது செலவில் 3.5 ஒதுக்க வேண்டிய நிலையுள்ளது அவர்களின் வருமானத்தில் ஆடைகளுக்கு ஒதுக்கப்படும் சதவீதமான
நூற்றுக்கு 4.4 பார்க்கும் போது இது மிகவும் கடுமையான நிலையாகும் அதிலும் இரண்டு மூன்று பெண் பிள்ளைகளை கொண்டிருக்கும் குடும்பங்களின் நிலை திண்டாட்டம் தான்
இலங்கையில் வயது வந்த பெண்களை உள்ளடக்கி நடாத்தப்பட்ட ஆய்வில் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமான பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் நாட்களில் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டமை வெளிப்படுத்தப்பட்டது
அதற்கான காரணத்தைக் கேட்ட போது நூற்றுக்கு 68-81வீதமானவர்கள் அதிக வலி உடல் ரீதியான அசௌகரியம் காரணமாக பாடசாலைக்கு செல்லவில்லை என்று தெரிவித்தனர்
நூற்றுக்கு 23-40 வீதமானவர்கள்ஆடைகளுக்கு வெளியே இரத்தம் கசிந்து விடும் என்ற பயத்தால் பாடசாலைக்கு செல்வதில்லை என கூறியுள்ளார்கள்
மாதவிடாயின் போது மாதவிடாய் துவாய்களை பயன் படுத்த முடியமால் தற்காலிக சுகாதாரமற்ற பயன்படுத்துவதால் மிகவும் பதிப்பான முடிவுகளே கிடைத்துள்ளது கர்ப்பப்பை புற்று நோய் சம்மந்தமான ஆய்வில் மாதவிடாய் நாட்களில் துணிகளைப் பயன் படுத்துவது அதற்கான காரணமாக அமைவது கண்டறியப்பட்டுள்ளது இவை கர்பப்பை புற்று நோய் உருவாகுவதில் தாக்கம் செலுத்துகின்றன
இதனை குறிப்பிடுவதற்கான காரணம் இலங்கையில் பெண்களுக்கிடையில் காணப்படும் புற்று நோய்களில் இரண்டாவது இடத்தில் #கர்பப்பை #புற்று நோய் உள்ளமை ஆகும்
இதை இலங்கை ஐனாதிபதி தேர்தலில் சொன்ன போது சஜித் pad man ஆகியுள்ளார்
Post a Comment