'முஸ்லிம்களை திருப்திப்படுத்த, சஜித் பிரேமதாஸ அப்படி கூறியிருப்பார்' - கோடீஸ்வரன் Mp
விடுதலை புலிகள் காலத்தில் நம்பிக்கை அடிப்படையில் தான் பேச்சுவார்த்தைகளை நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேபோல தாங்களும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கான உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்களுடனான கலந்துரையாடலும், செய்தியாளர் சந்திப்பொன்றும் நேற்று அவரது காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள், இழைக்கப்பட்ட அநீதிகளை, துன்ப துயரங்களை கருத்தில் கொண்டு எமது தமிழ் மக்களின் இருப்புகளை பாதுகாத்து கொள்வதற்கும், தமிழர்களின் தேசிய பிரச்சினையான இன பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்.
காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு,அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கிய விடயங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் ஒத்து போகின்ற காரணத்தினாலே சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அந்தவகையில் இன்று கூடி எட்டப்பட்ட முடிவுகளுக்கமைய ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் பிரதேசங்களில் சூறாவழி பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகவும், சஜித் பிரேமதாஸவின் அன்னம் சின்னத்தை ஆதரித்து வாக்கு வீதத்தையும் அதிகரிக வைப்பதற்கான வேலைப்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி கொள்வதற்காக மஹிந்தவுடன் சேர்ந்து, இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் நடைப்பெறவில்லை என கூறிய போதும் மஹிந்த தரப்பு கண் கொண்டு பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
ஜனாதிபதி வேட்பாளர் உண்மையிலே அந்த மேடையில் முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதற்காகவே கூறியிருப்பார். அவ்வாறு செயற்பட முனைவாரானால் தமிழ் மக்கள் அவருக்கு கொடுக்கும் ஆதரவு தொடர்பாக பரிசீலிக்கப்படும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலம் தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேசிய போது இது அம்மக்களின் நீதியான, நியாயமான கோரிக்கை. இதை நான் ஜனாதிபதியானதும் நிச்சயம் நிறைவேற்றி தருவேன் என எங்களுக்கு சார்பாக குரல் கொடுத்திருக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
எழுத்து மூல உத்தரவாதம் இன்றி நம்பிக்கை அடிப்படையில் நீங்கள் பிரதிநிதுத்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாச அவர்களுக்கு வழங்கும் ஆதரவின் பின்னர் நீங்கள் தோல்வியடைந்தால் பொறுப்பு கூற வேண்டியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தானே சாரும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,
நம்பிக்கை அடிப்படையில் தான் நாங்கள் பல தரப்பட்ட பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
விடுதலை புலிகள் காலத்தில் நம்பிக்கை அடிப்படையில் தான் பேச்சு வார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
விடுதலை புலிகள் பலமாக இருந்த காலத்தால் நம்பிக்கை இழந்து பேச்சுக்கு செல்லவில்லை.அதே போல நாங்களும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் ஆதரவளிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment