தேர்தலில் JVP க்கே மிகவும் சோகமான முடிவு - ரணிலுக்கு உதவிய தரகர் அனுரகுமார
இம்முறை தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணிக்கே மிகவும் சோகமான முடிவு ஏற்பட்டதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,
பெரிய அளவில் செலவு செய்து, நாடு முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி காலிமுக திடலை நிரப்பிக் காட்டிய மக்கள் விடுதலை முன்னணிக்கு 3 வீத வாக்குகளே கிடைத்தன.
காலிமுகத்திடலுக்கு வந்த மக்கள் குடும்பமாக வாக்களித்திருந்தாலும் மக்கள் விடுதலை முன்னணிக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கும்
இந்த தேர்தல் பொதுத் தேர்தலாக இருந்திருக்குமாயின் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே தெரிவாகி இருப்பார்.
ஹம்பாந்தோட்டையில் மாத்திரமே மக்கள் விடுதலை முன்னணிக்கு 5 வீதத்தை தாண்டி வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினரை பெற முடியும். அத்துடன் தேசிய பட்டியலிலும் அந்த கட்சிக்கு ஒரு உறுப்பினரே கிடைப்பார்.
மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற அரசியலை ஆரம்பித்த 1994ஆம் ஆண்டு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவானார். தற்போது 25 ஆண்டுகள் கடந்து அந்த கட்சி மீண்டும் பழைய இடத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக ரணில் விக்ரமசிங்கவின் நாட்டை காட்டிக்கொடுக்கும் உடன்பாடுகளுக்கு உதவிய தரகர் என அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படுகிறது.
உடன்பாடுகளின் போது தரகருக்கு வழங்கும் மூன்று வீதத்தை மக்கள் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கியுள்ளனர் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment