ஆளுநர் முஸம்மிலுடன் ஊடகவியலாளர், மாநாட்டில் பங்கேற்ற ஞானசார தேரர்
இந்த ஆட்சியாளர்களுக்கு சிறுபான்மை மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்க்க எவரும் முயற்சிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார, தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி சிந்திக்து அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் வடமேல் ஆளுநர் மொஹமட் முசமிலுக்கு எதிராக சிங்கள பெளத்த மக்களை தூண்டிவிட நாம் எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. எம்மை சாட்டி எவரும் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் எனவும் அவர் கூறினார்.
வடமேல் மாகாண ஆளுநர் மொஹமட் முசமிலின் நியமனத்துகத்கு எதிராக சிங்கள மக்கள் தேரர்கள் சிலருடன் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்யவுள்ளதாகவும் அதற்கு பொதுபல சேனா தலைமை தாங்குவதாகவும் குறிப்பிடப்பட்ட நிலையில் இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் ஆளுநர் மொஹமட் முசம்மிலும் கலந்துகொண்டனர்.
இதன்போதே கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு கூறினார்.
Post a Comment