Header Ads



"சந்திரிக்காவுக்கு பைத்தியம் இல்லையென்றால், எமக்குத்தான் பைத்தியம்"

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் ஆற்றிய உரை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார். 

மினுவன்கொடை மத்திய நகரில் நேற்று (12) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 

அங்கு கருத்து தெரிவித்த அவர், சந்திரிக்கா மூன்று முறை ´பிரபாகரன் சேர்´ என்று கூறியுள்ளதாக நேற்று தமிழ் பத்திரிக்கை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்தாக தெரிவித்தார். 

" ஒன்று அவருக்கு பைத்தியம், இல்லையென்றால் எமக்கு பைத்தியம்" என தெரிவித்த மஹிந்த, பிரபாகரன் சேர் என்று கூறுவதன் மூலம் அவர் பிரபாகரன் கோரியதை பிரேமதாசவின் ஊடாக பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார். 


2 comments:

  1. செத்துப்போன கதைகளையும் வம்புகளையும் அளந்து இரண்டு பைத்தியங்கள் சேர்ந்து பொதுமக்களை பைத்தியத்தில் ஆழ்த்த முயலுகின்றது. இந்த பைத்தியங்களின் பேச்சு, உரைகளில் பொதுமக்களுக்கு எந்தப் பயனுமில்லை என்பதையும் மக்கள் நன்றாக விளங்கிக்கொண்டால் அழிவில் இருந்து அவர்கள் கொஞ்சமாவது தப்பலாம்.

    ReplyDelete
  2. உண்மையிலயே இந்த மகிந்த ஒரு மிரண்டாவதி என்பது நன்கு விளங்குகின்றது அத்தோடு சிங்கள மக்களிடம் சிறுபான்மையினரை எதிரியாக சித்தரிக்கும் இனவாதத்தை தூண்டும் மிகப்பெரிய நாசகமான இந்த மஹிந்தவின் பேச்சுக்கள்- பிரபாகரன் சார் என்றல்ல திரு பிரபாகரன் என்றுதான் சந்திரிக்கா சொன்னார். - மர்சூக் மன்சூர் -தோப்பூர்

    ReplyDelete

Powered by Blogger.