பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, இன்று கடமைகளை பொறுப்பேற்றார்
புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று -20- தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கமல் குணரத்ன புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகத்தை எழுதி கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டதுடன் நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment