பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட சு.க. தீர்மானம்
எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (21) இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்லில் பெற்ற முன்னேற்றம் மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment