சஜித்தடன் ஏன், விவாதத்திற்கு சம்மதிக்கவில்லை - இதோ விளக்குகிறார் கோட்டாபய
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை தன்னுடன் பகிரங்க விவாதம் ஒன்றில் பங்கேற்குமாறு பல சந்தர்பங்களில் கோரியிருந்தார்.
ஆனால் நேற்றும், இதற்கு முன்னரும் 360 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளுமாறு சஜித் பிரேமதாசவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் அதனை ஏற்றுக்கொண்ட இறுதி நேரத்தில் அதில் பங்கேற்கவில்லை.
இவ்வாறான நிலையில் அததெரண தொலைக்காட்சியில் நேற்று இரவு நடைபெற்ற 360 நிகழ்ச்சில் கலந்துக்கொண்ட கோட்டாபய ராஜபக்ஸவிடம் இது தொடர்பில் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் ´தான் மக்களுக்கு மாத்திரமே பதிலளிக்கும் பொறுப்பை´ கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
தான் முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த பல்வேறு ஊடக சந்திப்புகளில் கலந்துக்கொள்வதாகவும் அதேபோல் மற்றையவர்களும் மக்கள் மத்தியில் தனது கருத்துக்களை தெரிவிக்க கூடிய இயலுமை உள்ளதாகவும் அவர் கூறினார்.
அதற்கமைய மக்கள் தமக்கு ஏற்ற கொள்கை பிரகடனத்தை தெரிவு செய்ய முடியும் என தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஸ, அதன் மூலம் தத்தமது கொள்கை பிரகடனங்களை உண்மையில் செயற்படுத்த கூடிய ஆற்றல் யாரிடம் உள்ளது என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தனிப்பட்ட முறையில் தனது எதிராலியுடன் விவாதம் புரிவது வெறும் சேறு பூசும் நடவடிக்கையாகவே அமையும் என தெரிவித்த அவர் இதுவரையிலும் தான் எந்தவொரு வேட்பாளரின் பெயரையும் தேர்தல் பிரசாரங்களின் போது பயன்படுத்தவில்லை எனவும் எனவும் கூறினார்.
இலங்கையில் உள்ள இவ்வாறான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என தெரிவித்த அவர் தன்னை எவர் விமர்சித்தாலும் தான் அவ்வாறு செயற்பட போவது இல்லை எனவும் அதுவே தனது கொள்கை எனவும் கோட்டாபய ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.
Witty reply! Wish him the success!
ReplyDelete