Header Ads



தமிழ் - முஸ்லிம் அர­சியல்வாதிகள் நினைத்­தது பிழை

நாட்டில் இரா­ணுவ முகாம்கள் காணப்­ப­டு­வது நாட்­டி­னதும் பொது மக்­க­ளி­னதும் பாது­காப்­பிற்கே அன்றி சிறு­பான்மை மக்­களை துன்­பப்­ப­டுத்­து­வ­தற்கு அல்ல என மல்­வத்தை பீடத்தின் அனு­நா­யக்கர் திம்­புல்­கும்­புறே விம­ல­தம்ம தேரர் தெரி­வித்­துள்ளார்.

தகவல் தொழில்­நுட்ப, தொலைத்­தொ­டர்­புகள், உயர்­கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்­தன மல்­வத்தை பீடத்தின் அனு­நா­யக்­கரை சந்­தித்து ஆசி­பெற்ற போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி பத­விக்கு வரு­பவர் தமிழ் முஸ்லிம் மக்­க­ளது ஆத­ரவு இல்­லாமல் தெரிவு செய்­யப்­பட முடி­யாது என்று தமிழ் முஸ்லிம் அர­சியல் வாதிகள் நினைத்­தது பிழை என்­பதை இம்­முறை நடை பெற்ற தேர்தல் தெளி­வாக எடுத்­துக்­காட்­டு­கி­றது. ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ சகல இனத்­த­வர்­க­ளுக்கும் வேறு­பா­டின்றி சேவை செய்ய தன்னை அர்ப்­ப­ணிக்க கூடி­யவர் என்­பதை உறு­திப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்றார்.நாட்டில் எத்­த­கைய அபி­வி­ருத்­திகள் மேற்­கொண்­டாலும் அவை தேசிய பாது­காப்புக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யக்­கூ­டாது என்­பதை ஜனா­தி­பதி நன்கு விளங்கி செயற்­ப­டு­கின்றார். முழு நாட்­டிலும் அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்ளும் போது வடக்கு கிழக்கில் அமைக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ முகாம்கள் அகற்­றப்­படக் கூடாது. அவை அனைத்து மக்­களின்  பாது­காப்­பிற்­கா­கவே ‍அமைக்­கப்­பட்­டுள்­ளன.

நாட்டில் இரா­ணுவ முகாம்கள் இருப்­பது நாட்­டி­னதும் பொது மக்­க­ளி­னதும் பாது­காப்­பிற்கே அன்றி சிறு­பான்மை மக்­களை துன்­பப்­ப­டுத்­து­வ­தற்­காக அமைக்­கப்­பட்வை அல்ல. மனம் போன போக்கில் அவற்றை அகற்ற முற்­பட்டு தேசிய பாது­காப்­பிற்கு குந்­தகம் ஏற்­ப­டுத்த வேண்டாம்.

ஜனா­தி­ப­தியின் பத­வி­யேற்பு வை ­ப­வத்தில் அவர் நிகழ்த்­திய உரையைப் பார்க்­கும்­போது ஒரு நல்ல பய­ணத்தை ஆரம்­பித்­துள்ளார் என்­பது தெளிவாக புலனாகிறது. அரசியல் பேதங்களை மறந்து புதிய ஜனாதிபதிக்கு தமது ஒத்துழைப்பினை வழங்கி நாட்டின் அபிவிருத்தியினை மேலெழச்செய்ய சகலரும் ஒன்றித்து செயற்பட வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.