Header Ads



பொலிஸ் ஊடகப் பேச்சாளரின், பணிகள் அனைத்தும் நிறுத்தம்

(எம்.எப்.எம்.பஸீர்)

பல வருடங்களாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கி வந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன.  

அத்துடன் பொலிஸ் பேச்சாளரின் பணிகளும் இன்று -27- இடை நிறுத்தப்பட்டிருந்தது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்வதை உடன் நிறுத்துமாறு மேலிடத்திலிருந்து  வந்த உத்தரவொன்றுக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இன்று ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரது அலுவலக பணிகள் நிறுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் பின்னர் பொலிஸ் பேச்சாளர் மற்றும் அவரது  அலுவலகம் முன்னெடுத்த  தகவல் வழங்கும் பணிகளை பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் ஊடாக முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த திட்டத்துக்ல்கு அமையவே  பொலிஸ் தலிமையகத்தில் உள்ள பொலிஸ் பேச்சாளர் அலுவலகத்துக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.